டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர் கூட்டணியில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமான வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விஷ்ணு நடிப்பில் முதல் முறையாக தெலுங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு “ப்ரேம லீலா பெல்லி கோலா” என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களின் தெலுங்கு டப்பிங் படங்கள் டோலிவுட்டில் வரவேற்பு பெறுவதால் விஷ்ணுவும் தெலுங்கு மார்கெட்டை குறிவைத்துள்ளார். “ப்ரேம லீலா பெல்லி கோலா” என தலைப்புடன் கூடிய இப்பட போஸ்டர்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இப்படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.