பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சந்தானம் ஹீரோவான சமயத்தில் சூரியையும் ஹீரோவாக்கி விட வேண்டும் என்று சிலர் கதைகளுடன் அவரை துரத்திக்கொண்டு திரிந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை. கடைசி வரை காமெடியனாகவே இருந்து விட்டுப்போகிறேன் ஆளை விடுங்க சாமி என்றபடி காமெடியனாகவே இப்போதுவரை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் சூரிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுகுறித்து, நயன்தாரா தரப்பில் விசாரித்தால், எங்களிடம் பல டைரக்டர்கள் வந்து கதை சொல்கிறார்கள். அதில் எந்த கதையில் சூரி இருக்கிறார் என்பது எங்களுக்கே தெரியவில்லை. ஆனால் அப்படியே இருந்தாலும் அது நயன்தாராவை மையப்படுத்திய படமாகத் தான் இருக்கும். அதில் சூரி காமெடியனாக வேண்டுமானால் நடிக்கலாம். அப்படித்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.