பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சில படங்களில் ஹீரோயின், சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என படத்திற்கு படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருபவர் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், துருவ நட் சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதே படத்தில் ஹன்சிகா, பூர்ணா என இரண்டு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், சசிகுமாரின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், எப்போதுமே நான் ஒரு படத்தில் கமிட்டாகும்போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்பதை பார்ப்பதில்லை. கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டுமே கருத்தில் கொள்வேன். அந்த வகையில், பார்க்கப்போனால் கொடிவீரன் படத்தில் எனக்கு அழுத்தமான வேடம். கதைப்படி தங்கை வேடமாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். எப்படி காக்கா முட்டையில் அம்மா வேடம் பேச வைத்ததோ, அதேபோல் இந்த தங்கை வேடமும் என்னை பேச வைக்கும் வகையில் உள்ளது. அதனால் சசிகுமாருக்கு தங்கையானதுகூட மகிழ்ச்சிதான் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.