ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கதாநாயகி வேடங்கள் தனக்கு பெரிதாக கைகொடுக்காததால் தற்போது அதிலிருந்து விலகி நிற்கிறார் பூர்ணா. அதன்காரணமாக சமீபகாலமாக வித்தியாசமான வேடங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். அந்த வகையில், அருள்நிதி நடித்த தகராறு படத்தில் நெகடீவ் ஹீரோயினாக நடித்தவர், தற்போது சவரக்கத்தி படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக ஒரு கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கொடிவீரன் படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கும் அவர், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியில் வெளியான ஒரு பாடலை டப்மாஷ் செய்து பதிவேற்றியுள்ளார். அதோடு, இன்றைக்கு நான் முழுமையான பைத்தியமாகி விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது இணையதள ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.