துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
டோலிவுட்டின் முன்னணி மாஸ் ஹீரோவான ரவி தேஜா தனது திரை உலக பயணத்தை உதவி இயக்குனராக துவக்கியவர். பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி தேஜா நடிகராக மாறி பின்னாளில் டோலிவுட்டின் மாஸ் மகாராஜாவாக உயர்ந்தார். ரவி தேஜாவின் சமீபத்திய படங்கள் தோல்வியைத் தழுவின. இதற்கிடையில் இயக்குனர் விக்ரம் ஸ்ரீகொண்டா இயக்கத்தில் டச் சேஷி சூடு மற்றும் இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் ராஜா தி கிரேட் போன்ற படங்களிலும் ரவி தேஜா நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படங்களை முடித்த பின்னர் ரவி தேஜா நடிப்பதை நிறுத்தி வைத்துவிட்டு திரைப்படங்களை இயக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக தானே தயார் செய்துள்ள கதைகளுக்கு திரைக்கதை அமைக்கும் பணிகளிலும் ரவி தேஜா ஈடுபட்டுள்ளார். ரவி தேஜாவின் இயக்குனராகும் முடிவு அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.