ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் நாயகியாக பல படங்களில் நடித்த கேத்ரின் திரைஷா தெலுங்கிலோ இரண்டாவது நாயகியாகவே நடித்து வருகின்றார். அல்லு அர்ஜூனின் சரைய்னோடு படத்தில் நடித்த கேத்ரின் தற்போது ராணா-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் நேனே மந்திரி நேனே ராஜா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகின்றார். பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் குத்தாட்ட வாய்ப்புகளை கேத்ரின் ஏற்க துவங்கியுள்ளார். பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கேத்ரின் குத்தாட்டம் போடவுள்ளாராம். ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ப்ரக்யா ஜெய்ஸ்வால் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் குத்தாட்டம் போடும் கேத்ரின் திரைஷாவிற்கு ரூ 60 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான குத்தாட்ட பாடலுக்கான படப்பிடிப்பில் கேத்ரின் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.