தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம்... என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார்.
இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்தும் கமலை கண்டிக்கிறோம் என்று கூறி இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.
இந்நிலையில் இதேகருத்தை வலியுறுத்தி, கமல் மீது நடவடிக்கை கோரி கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மகாபாரதத்தை கமல்ஹாசன் அவதூறாகப் பேசி உள்ளார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.