Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்திரஹாசன் ஹீரோவாக நடித்த கடைசி படம்

21 மார், 2017 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Chandrahassans-last-hero-movie

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், இருதினங்களுக்கு முன்னர் லண்டனில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். அவருக்கு கமல் உட்பட திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சந்திரஹாசன், சில படங்களில் சிறிய தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசியாக ஒரு படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அந்தப்படம் பற்றிய விபரத்தை கீழே பார்ப்போம்...


ஜிபி ஸ்டூயோ சார்பில் பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் லியோ விசன் சார்பில் விஎஸ்.ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் "அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க". இதில் ஹீரோவாக சந்திரஹாசனும், ஹீரோயினாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டெல்லிகணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.


ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் ஸ்டிபன் ரங்கராஜ்.


படப்பிடிப்பின் போது பல ஆலோசனைகளை தந்து ஆசானாய் விளங்கிய சந்திரஹாசனின் மறைவு, இப்படக்குழுவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இவ்வேளையில் அவரது நீங்கா நினைவாக இப்படம் அனைவரையும் கவரும் என்கின்றனர் படக்குழுவினர். காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in