Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி விட்டார் கங்கைஅமரன்! -இசையமைப்பாளர் செளந்தர்யன்

21 மார்,2017 - 09:28 IST
எழுத்தின் அளவு:

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவரை தவறான வார்த்தைகளால் விமர்சித்து இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் கங்கை அமரன் என்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன். அதுகுறித்து அவர் கூறுகையில்,


ஒரு செய்தி சேனலில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என் இசையில் உருவான பாடல்களை பாடக்கூடாது என்று இளையராஜா கூறியுள்ளாரே? என்று கங்கை அமரனிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர், ஒரு தன்மையாக பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சொன்னது முட்டாள்தனமானது, மடத்தனமானது, இதற்கு மேல சம்பாதிச்சு என்ன பண்ணப்போறாரு, திங்கிறது ரெண்டு இட்லி, ரெண்டு சப்பாத்தி என்று தனது பாடிலாங்குவேஜை அருவருப்பாக வைத்தபடி பதில் சொல்கிறார்.


பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே -என்ற பாடலை இளையராஜா இசையில் எழுதினார் கங்கைஅமரன். அந்த பாடல் ஹிட்டடித்த பிறகுதான் அவர் உலகத்துக்கு தெரிந்தார். ஆக, அவரை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் இளையராஜா. அப்படிப்பட்ட உலகமே வியக்கும் இசைஞானியை இவர் அப்படி சொல்லலாமா? இப்படிப்பட்ட அண்ணனை நினைத்து அவர் பெருமைப்பட வேண்டும்.


மேலும், எஸ்.பி.பி., பாடக்கூடாது என்று இளையராஜா சொல்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆனால் அது சரியா தவறா என்பதை நீதிமன்றத்தில் சொல்லப் போகிறார்கள். அதுவேற விசயம். ஆனால், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை யமைத்து உலகமே வியந்து பார்க்கும் ஒரு இசைமகானை அவர் அந்த மாதிரி வார்த்தைகளால் பேசியது கண்டனத்திற்குரியது. என்னைப்போன்ற கோடான கோடி இசைஞானி ரசிகர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுத்துள்ளது.


தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். ஆனால் இவர் ஆள் சேர்த்து வந்து அடிப்பார் போலிருக்கு. அந்த அளவுக்கு விவகாரமாக பேசுறாரு கங்கை அமரன் -என்று தனது ஆதங்கத்தை சொல்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன்.


Advertisement
என்னை அந்த மாதிரி நடிகையாக்க முடியாது! -ராகுல் பிரீத் சிங்என்னை அந்த மாதிரி நடிகையாக்க ... விஷ்ணு விஷாலின் கதாநாயகன் ஜுன் 23-ல் ரிலீஸ் விஷ்ணு விஷாலின் கதாநாயகன் ஜுன் 23-ல் ...


வாசகர் கருத்து (1)

21 மார்,2017 - 11:33 Report Abuse
சாதிக்சென்னை கங்கை அமரன் தப்பு செய்யவில்லையே. ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதும் நன்றி மறப்பதும் செய்யவில்லை என்றால் அவர் தம்பியும் இல்லை: சினிமாக்காரனும் இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vivegam
  • விவேகம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film thappu thanda
  • தப்புதண்டா
  • நடிகர் : சத்யா (புதுமுகம்)
  • நடிகை : சுவேதா கய்
  • இயக்குனர் :ஸ்ரீகண்டன்
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Yeidhavan
  • ஏய்தவன்
  • நடிகர் : கலையரசன்
  • நடிகை : சாட்னா டைட்டஸ்
  • இயக்குனர் :சக்தி ராஜசேகரன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in