இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் டிவியில் ஸ்டேன்டப் காமெடியில் தனது கலைப்பயணத்தைதொடங்கியவர் ஈரோடு மகேஷ். தொடர்ந்து பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், சில படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தார். தற்போது இணையதளம் என்ற படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஒரு டூயட் பாடல்கூட உள்ளதாம்.
இதுபற்றி ஈரோடு மகேஷ் கூறும்போது, இணையதளம் எனக்கு முக்கியமான படம். அந்த கதையை கேட்டபோது ரொம்ப நாளைக்கு பிறகு சென்னையில் இருந்து ஈரோடு போய் அம்மாவ பார்த்தா எவ்வளவு சந்தோசமாக இருக்குமோ அப்படி இருந்தது. ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கேட்ட திருப்தியோட வெளியில வந்தேன். ஆத்மார்த்தமாக உழைச்சிருக்கேன்.
அதோடு, இந்த படத்துல எனக்கு ஜோடியாக கெளசிகா என்ற நடிகை நடிச்சிருக்காங்க. அவரோட ரெண்டு லவ் சீன் இருக்கு. ஒரு பாடல் இருக்கு. எனக்கு ரொம்ப சந்தோசம் அதுதான். என் மனைவிக்கு வருத்தமும் அதுதான். மேலும், நான் பெரிய படம் சின்ன படம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல படம் என்பதை மட்டுமே கருத்தில் கொள்கிறேன் என்கிறார் ஈரோடு மகேஷ்.