Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோடியுள்ள மனிதனை மதிக்கிறவனில்லை இந்த தாடி - டி.ராஜேந்தர்

20 மார், 2017 - 12:42 IST
எழுத்தின் அளவு:
I-will-not-respect-crore-people-says-T.Rajendar

ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் கவண். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர், விஜய்சேதுபதி, மடோனா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது,


இந்த கவண் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் கே.வி.ஆனந்த். எனக்கு ரொம்ப பிடித்தமான கேமராமேன் அவர். நீண்டகால நட்பு எங்களுக்கிடையே இருந்தது. முதல்வன் படத்தில் அவர் படமாக்கிய ஷக்கலக்கபேபி பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். தனக்கென ஒளிப்பதிவுத் துறையில் தனி முத்திரை பதித்தவர். ஒரு தனித்தன்மையுள்ள இயக்குனர். ஒரு நிறுவனத்தில் ஒரு படம் பண்ணினாலே அதற்கு அடுத்த படம் அந்த டைரக்டர் பண்ணுவது கடினம். ஆனால் ஏஜிஎஸ் பிலிம்சில், கே.வி.ஆனந்துக்கு இது மூன்றாவது படம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார். பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் இருக்கலாம். ஆனால் கதைதான் எனது ஹீரோ. ஹீரோவெல்லாம் அடுத்துதான். அது தலைக்கணம் அல்ல. தன்னம்பிக்கை. அப்படிப்பட்டவர் தான் கே.வி.ஆனந்த்.


எனக்கு பிடித்த அவர் என்னைத்தேடி வந்து கதை சொன்னார். நான் முதலில் ரொம்ப தயங்கினேன். என்னை புரிஞ்சிக்காதவர்களுடன் என்னால் போக முடியாது. அவர் என்னை புரிய வைத்தாரா. இல்லை நான் அவரை புரிய வைத்தேனா தெரியல. அவர் கதை சொன்னது என்னை இம்ப்ரஸ் பண்ணியது. விஜய்சேதுபதிகூட நல்ல நடிகர் அற்புதமான நடிகர். அவருக்கும்கூட நல்ல கதை இருந்தால்தான் வெற்றி. அதை கொடுக்கக்கூடிய இயக்குனராக இருந்து இந்த கவண் படத்தை இயக்கியுள்ளார் கே.வி.ஆனந்த்.


மேலும், நான் வெளிப்படத்தில் நடிக்கிற பழக்கமில்லை என்று அவரிடம் சொன்னேன். நீங்க தான் நடிக்க வேண்டும் என்ற பிடிவாதமாக இருந்தார். இந்த கதைக்கு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள். உங்களது மரியாதை கெட்டுடாம, உங்களுக்கான முழு சுதந்திரத்தை நான் கொடுப்பேன் என்கிற நம்பிக்கை இருந்தா பண்ணுங்க என்றார். அப்படியொரு வார்த்தையை நான் கேட்டதில்லை. அவரது வார்த்தை எனக்கு பிடித்தது. நானே பல படம் தயாரிச்சிட்டேன். ஏவிஎம் அழைத்தும் நான் டைரக்ட் பண்ணியதில்லை. வாஹினியில் செட் போட்டு படமாக்கினேன். அந்த நிறுவனங்களிலும் நான் பணியாற்றியதில்லை. கோடியுள்ள மனிதனை மதிக்கிறவனில்லை இந்த தாடி. நான் பல கோடி பார்த்துட்டேன். லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதை தான் பேசுவேன். அது என் சுபாவம்.


சினிமாவை காதலிக்கிற தயாரிப்பாளர்கள் ரொம்ப குறைவு. டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர். இந்த கதையில் நான் நடிக்க முடியும்னு தன்னம்பிக்கையோடு நடித்தேன். அந்த பக்கம் விஜய்சேதுபதி. ஒரு படத்தில நடிச்சாலே தலையை அப்படி தூக்கி விட்டுட்டு போற காலம். ஆனால் விஜய்சேதுபதி எத்தனை வெற்றி படங்களில் நடித்தாலும் பணிவு. ஒரு தொலைக்காட்சி நிலையத்துக்கு நான் போயிட்டு வர்றப்ப. ஒரு பையன் ஆட்டோகிராப் கேட்கிறார். அது யாருன்னு கேட்டா இத்தனை படங்களில் நடித்த விஜயசேதுபதி என்கிறபோது எனக்கு எவ்ளோ கம்பர்டபிளா இருக்கும். அதனால் இந்த படத்தில் நான் நடிச்சேன் என்றார் டி.ராஜேந்தர்.


Advertisement
மீடியாக்களை பற்றி பேசப்போகும் கவண்மீடியாக்களை பற்றி பேசப்போகும் கவண் தமிழ், தெலுங்கு இரண்டும் தெரிந்தால் தான் விஜய் ஆண்டனி படத்தில் வாய்ப்பு! தமிழ், தெலுங்கு இரண்டும் தெரிந்தால் ...


வாசகர் கருத்து (1)

g.murugesan - ulunderpate  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2017 - 07:39 Report Abuse
g.murugesan வருது மகன் நடித்த படங்களை ஒருகாலத்தில் தயாரிப்பாளரை மிரட்டி ஏரிய உரிமம் வாங்கியவன் இந்த தாடி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in