Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப் போகிறீர்கள்? இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்

20 மார், 2017 - 10:10 IST
எழுத்தின் அளவு:
Gangai-Amaran-slams-Ilayaraja-regarding-SPB-issue

இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் இது குறித்து கூறியிருப்பதாவது:


இளையராஜாவின் முடிவு தவறானது. என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள், பாடாதீர்கள் என்று மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றவர்கள் கூட சொன்னதில்லை, எதற்காக இந்த ஆசை. இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள். அந்தளவுக்கா பணம் கஷ்டம் வந்துவிட்டது. இசையை வியாபாரமாக்க கூடாது. பாடலுக்கான சம்பளத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டோம். நம்மை பின்பற்றி நம் பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் நமக்குத்தானே அது பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசை அமைத்ததே மக்கள் பாடுவதற்குத்தான். பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும், அசிங்கமாக உள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் கங்கை அமரன்.


Advertisement
விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் மூவரணிவிஷாலுக்கு எதிராக களம் இறங்கும் ... இளையராஜாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்: எஸ்.பி.பி.சரண் இளையராஜாவுக்கு எதிராக எந்த ...


வாசகர் கருத்து (26)

sudakar - chennai,லைபீரியா
22 மார், 2017 - 13:32 Report Abuse
sudakar இவ்வளவு தான் சம்பாதிக்கணும் என்று சட்டம் போட்டிருக்கீரா அமரன் அவர்களே? சட்டம் போட நீர் யார்?
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
21 மார், 2017 - 19:47 Report Abuse
Vaal Payyan இளைய ராஜா சாமானிய மக்கள் தன பாட்டை கேட்பதை தடுக்க வில்லை .. தன் பாடல்கள் வைத்து பணம் பண்ணும் செயலை தடுக்கிறார் உன் திறமையை யாராவது காசு பண்ணினால் நீ சும்மா இருப்பாயா பாலு பண்றது தான் தில்லாலங்கடி வேலை ... மொத்த சமூக வலைத்தளங்களும் இசைஞானிக்கு ஆதரவு ஏன் இந்த கேள்வியை ரஹ்மான் கிட்ட கேளேன் பாப்போம் நீ தம்பியை பிறந்த பாவத்தை அவர் எங்கே போய் தொலைப்பார் என்றெய் தெரியவில்லை
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
21 மார், 2017 - 19:35 Report Abuse
meenakshisundaram கங்கை அமராநீ அரசியலுக்கு வந்து இனிமே மாவாட்ட பொறியா?
Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20 மார், 2017 - 17:54 Report Abuse
JEYAM தமிழன் JEYAM லூசு கங்கை , நீ எதுக்கு தெலுங்கனுக்கு சப்போர்ட் பண்ணுகிறன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்...அண்ணன் இளையராஜா இல்லையென்றால், உனக்கு எங்கடா முகவரி?... நீயெல்லாம் இசைஞானிக்கு அறிவுரை சொல்ல வந்துட்ட?.. தமிழ் திரை உலகிலேயே நான் மதிக்கும் ஒரே மாமேதை இளையராஜா... அவரை கொச்சை படுத்திய நீ, 1000 ஓட்டுக்கள் கூட RK நகரில் வாங்க மாட்டாய்.. நீ எதுக்கு சம்பாதிச்ச?.. உனது மகனுக்கு கொடுக்க தானே?...SPB இந்த தாளாத வயதிலும் எதுக்கு பாடுறான்..?.. தனது மகனுக்கு கொடுக்கத்தானே?... அப்படினா, இளையராஜாவை மட்டும் குத்தம் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை..?... கடல் நீர் உள்ளளவும் இளையராஜா புகழ் இருக்கும்...
Rate this:
sarma - wellington,நியூ சிலாந்து
20 மார், 2017 - 17:26 Report Abuse
sarma will illayaraja pay royalty to MSV when he was singing his songs (which he admits) when he was young? Has he forgotten that SPB made him as a harmonium player when he and his brothers were struggling for money (in his own admission). This reminds me what the great great leg MSV says " Sangeethatudan ingeethamum katrukollungal". SBP pl don't sing Illayaraja songs you have done so much and many for MSV, Mama ( K V M) and other music directors in so many languages. We want to listen those songs
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in