Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மக்களை சிரிக்க வைத்தவரை சினிமா சிரிக்க வைக்கவில்லை

19 மார், 2017 - 13:35 IST
எழுத்தின் அளவு:
actors-how-makes-people-laugh-are-not-happy-behind-the-screen

சமீபத்தில் மறைந்த நடிகர் தவக்களை பற்றிய செய்திகள் ஒரு சிறிய செய்தியாக கடந்து போய்விட்டது. ஆனால் மக்களை சிரிக்க வைத்த அந்த கலைஞனை சினிமா சிரிக்க வைக்காமல் போய்விட்டது என்பதே உண்மை. அவரைப் பற்றி ஒரு சிறிய பிளாஷ்பேக்...


ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நவாப்பேட்டைதான் சொந்த ஊர். 1975ம் ஆண்டு பிறந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. 3 அடி உயரம்தான் வளர்ந்தார். 3ம் வகுப்புவரைதான் படித்தார். அவர் நடிகர் என்பதை விட அடிப்படையில் அவர் ஒரு நடன கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. நடிகை அனுராதாவின் தந்தைதான் அவரது குரு. தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு பல தெலுங்கு படங்களில் குரூப் டான்சராக பணியாற்றி இருக்கிறார். இரண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்தார். பலரும் அவருக்கு முந்தானை முடிச்சுதான் முதல் படம் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பே அவர் பயணங்கள் முடிவதில்லை படத்தில் நடித்துவிட்டார்.


தவக்களையின் நண்பர் குள்ளமணி. இருவரும் ஒரு முறை கே.பாக்யராஜை சந்திக்க சென்றார்கள். அப்போது தவக்களையின் குழந்தை தனமான குரலும், மாடுலேசனும் பிடித்து விட அவரை மனதில் வைத்து முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகப்படுத்தினார். ஹீரோயின் ஊர்வசியின் நண்பனாக நடித்தார். கேரக்டர் பெயர் தவக்களை. அந்தப் படம் பெரிய வெற்றி பெற்று இவர் நடித்த கேரக்டரும் பேசப்பட்டதால் பெயரும் தவக்களை என்றே நிலைத்தது.


இந்தியில் அமிதாப்பச்சன், தென்னிந்தியாவில் அத்தனை சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து விட்டார். இந்திய மொழிகள் அனைத்திலும் சேர்த்து 400 படங்கள் நடித்தார். வினயன் இயக்கிற அற்புத தீவுதான் தமிழில் கடைசியாக நடித்த படம். சினிமா வாய்ப்பு குறைந்தாலும் நடனப்பள்ளி நடத்தி சம்பாதித்தார். சினி மின்மினி என்ற நடன குழுவை நடத்தி வந்தார். கோவில் திருவிழாக்கள், அரசு பொருட்காட்சிகளில் நடன நிகழ்ச்சி நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார். தனது நடன பள்ளி மூலம் பல நடன கலைஞர்களை உருவாக்கினார்.


அனைத்திலும் வெற்றி பெற்ற தவக்களை சொந்தப் பட தயாரிப்பில் தோற்றுப்போனார். தனது சேமிப்பு முழுவதையும் போட்டு மண்ணில் இந்த காதல் என்ற படத்தை தயாரித்தார்.


பொருளாதார நெருக்கடியால் படம் பாதியில் நின்றது. கடன் வாங்கி படத்தை முடிக்க நிறைய கடன் வாங்கினார். ஆனாலும் படத்தை முடிக்க முடியவில்லை. கடனை அடைக்க முடியவில்லைபேதுவே அவருக்கு பெரும் மனக்கவலை அளித்தது. அந்த கவலையுடனேயே மீண்டும் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி நடிக்க ஆரம்பித்தார். அதுவும் காலனுக்கு பொறுக்கவில்லை அவரது உயிரை கவர்ந்து சென்று விட்டான். மக்களை சிரிக்க வைத்த அந்த கலைஞனை சினிமா சிரிக்க வைக்கவில்லை.


Advertisement
தடை போட்ட இளையராஜா - இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்புதடை போட்ட இளையராஜா - இனி இளையராஜா ... மிக மிக அவசரத்தில் பெண் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை மிக மிக அவசரத்தில் பெண் ...


வாசகர் கருத்து (1)

Pillai Rm - nagapattinam,இந்தியா
20 மார், 2017 - 11:16 Report Abuse
Pillai Rm r i p
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in