Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏப்ரல் 14ல் ரஜினியின் புதிய படம் ஆரம்பம் ?

19 மார், 2017 - 11:13 IST
எழுத்தின் அளவு:
rajinikanth--new-movie-to-start-shoot-on-April-14th-?

'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் சில காட்சிகள் மட்டுமே படமாக வேண்டியுள்ளது. அது எப்படியும் இந்த மாதத்தில் முடிந்துவிடும் என்கிறார்கள். அதன் பின் சில நாட்கள் மட்டுமே ஓய்வெடுத்துக் கொள்ளும் ரஜினிகாந்த் அடுத்து பா.ரஞ்சித் படத்தில் நடிக்க வந்துவிடுவாராம்.


இந்தப் புதிய படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் அவருடைய சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இன்னும் இந்தப் படத்தின் நாயகி யார் என்பது முடிவாகவில்லை. சில வாரங்களுக்கு முன்பு ஹிந்தி நடிகையான வித்யா பாலன் நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. அவரும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஹாலிவுட் வரை சென்று விட்ட தீபிகா, தமிழ்ப் படங்களில் நடிக்க முன் வருவார் என்பது சந்தேகம்தான்.


'கபாலி' படம் போலவே தமிழில் பிரபரமில்லாத ஒரு ஹிந்தி நடிகையை அழைத்து வந்தாலும் வருவார்கள் போலிருக்கிறது.


Advertisement
யு-டியுப்பில் வெளியானது பாம்புசட்டை டிரைலர் !யு-டியுப்பில் வெளியானது பாம்புசட்டை ... தடை போட்ட  இளையராஜா - இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு தடை போட்ட இளையராஜா - இனி இளையராஜா ...


வாசகர் கருத்து (1)

Tamil - Trichy,இந்தியா
20 மார், 2017 - 09:12 Report Abuse
Tamil கபாலி படம் நஷ்டம் என தெரிவித்த கோவை மற்றும் சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் உஸார். கொள்ளை கும்பல் அடுத்த குப்பை திட்டத்திற்கு தயாராகி விட்டார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in