தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆடம்தாசன் இயக்கத்தில் பாபிசிம்ஹா-கீர்த்தி சுரேஷ், தாமிரபரணி பானு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பாம்புசட்டை. அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான இப்படம், சூர்யாவின் சிங்கம்-3 வெளியானபோதே திரைக்கு வர இருந்தது. ஆனால் அப்போது சரியானபடி தியேட்டர் கிடைக்காததால் பின்வாங்கியது. இந்த நிலையில், மார்ச் 24-ந்தேதி பாம்பு சட்டை படத்தை வெளியிட தயாராகியுள்ளனர். ஒருவேளை அந்த நாளில் சரியானபடி தியேட்டர்கள் கிடைக்காதபட்சத்தில் மார்ச் 31-ந்தேதி கண்டிப்பாக பாம்புசட்டை திரைக்கு வந்து விடுமாம்.
இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வாங்கியுள்ள திங்க் மியூசிக் நேற்று இப்படத்தின் டிரைலரை யு-டியுப்பில் வெளியிட்டுள்ளது. காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட பாம்புசட்டை டிரைலரை இரவு 7 மணிக்குள் 52 ஆயிரம் ரசிகர்கள் பார்த்து ரசித்து லைக் கொடுத்துள்ளார்கள். டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள இந்த வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கும் பட இயக்குநர் ஆடம்தாசன், கண்டிப்பாக படத்திற்கும் இதேபோன்று ரசிகர்கள் நல்ல வர வேற்பை கொடுப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.