'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் எனும் அறிமுகத்தோடு தெலுங்கு திரை உலகிற்குள் நுழைந்த பவன் கல்யாண் தனது கடின உழைப்பால் வெற்றிகரமாக 19 வருடங்களை திரை உலகில் கடந்துள்ளார். 1997 அக்டோபர் 11ல் பவன் கல்யாண் நடித்த அக்கட அம்மாயி இக்கட அப்பாயி எனும் முதல் திரைப்படம் வெளிவந்தது. அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள பவன் கல்யாண், நடிப்பில் 2017 ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கட்டமராய்டு. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று(மார்ச் 18) மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பவன் கல்யாணின் 20வது வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பவன் கல்யாணின் திரை உலக பயணத்தை கூறும் வீடியோ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. பலரது கவனத்தையும் ஈர்த்த இந்த வீடியோவிற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.