ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகி வருகிறது திலீப் நடிக்கும் 'ராம்லீலா' படம்.. அருண்கோபி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரயாகா மார்ட்டின் நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.. இதில் பத்திரிகையில் முக்கியமான கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளரான ரெஞ்சி பணிக்கரின் மகளாக பிரயாக மார்ட்டின் நடிக்கிறார்.. படத்தில் இவருக்கு ஆர்ட் டைரக்டர் கேரக்டர் ..
டிவி மற்றும் சினிமா இரண்டிலும் ஆர்ட் டைரக்டர் வேலைகளை எடுத்து செய்யும் பிரயாகா கிரியேட்டிவாகவும் துறுதுறுப்பாகவும் இருக்கும் பெண் தான் என்றாலும் சில மோசமான கற்பனைகளை பண்ணிக்கொண்டு அவ்வப்போது தளர்ந்துபோய், அதனால் தனது கேரியரிலும் பிரச்சனைகளை சந்திப்பவராம்.. ராதிகா தான் இவருக்கு உற்சாகம் கொடுத்து மீண்டும் மேலே கொண்டுவருவாராம். “முழுக்க முழுக்க ஒரு அரசியல் படத்தில் நடிப்பது இதுதான் முதன்முறை என்பதால் படம் முழுக்க ஆச்சர்யமாகவே இருக்கிறது” என கூறுகிறார் பிரயாகா மார்ட்டின்.