ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு எப்போதுமே ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்கிறது.. அந்தப்பொருட்களை வாங்கி சேர்த்துவைத்து அழகு பார்க்க, அணிந்து அழகு பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது.. சமீபத்தில் 'குங்பூ யோகா' பட புரமோஷனுக்காக இந்தியா வந்த ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் பின்னாடி அமர்ந்துகொள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட் சைக்கிளை ஓட்டினார். ஒரு நிகழ்ச்சியில் அந்த சைக்கிள் ஏலம் விடப்பட, அதை ஜாக்கிசானின் ரசிகர் ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததையும் நாம் பார்த்தோமே..
அப்படித்தான் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'புலி முருகன்' படத்தில் மோகன்லால் அணிந்திருந்த புலிப்பல் செயின் ரொம்பவே பிரபலம்.. இதை எந்நேரமும் கழுத்தில் அணிந்தபடி இருக்கும் மோகன்லால், ஒருகட்டத்தில் தனது பிரியமான தம்பிக்கு அதை அணிவிப்பார். அவரது தம்பி அபாயத்தில் சிக்கியுள்ளார் என்பதை ஒருமுறை அந்த செயினை வைத்துதான் மோகன்லால் உணர்ந்துகொள்வார். அந்த அளவுக்கு படத்தில் முக்கியத்துவம் பெற்ற அந்த செயின் சமீபத்தில் மோகன்லாலின் 'தி கம்ப்ளீட் ஆக்டர்.காம்' இணையதளம் மூலமாக ஏலம் விடப்பட்டது.. இதனை மோகன்லால் ரசிகர் ஒருவர் 1.10. லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.