தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு மூன்று வேடங்களில் நடித்துள்ள ஏஏஏ படம் படு வேகமாக வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. இவர்கள் இருவருக்கும் விரோதம் ஏற்பட காரணம்... ஒரு மீடியேட்டர் என்றும், அந்த மீடியேட்டர்தான் ஒருவரை பற்றி இன்னொருவரிடம் வத்தி வைத்து இருவருக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்டார் என்று கூறப்பட்டது. அதனால் தான் படமும் தாமதமாகி கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், ஏஏஏ படத்தில் சிம்பு ஏற்றுள்ள அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தின் முழு டீஸர் இன்று வெளிவரவிருக்கிறது. 'மதுரை மைக்கேல் என்ற கேரக்டரில் நடிக்கும் சிம்பு, 'அஸ்வின் தாத்தா' என்ற கேரக்டரிலும் நடிக்கிறார். இந்த கேரக்டர் பற்றிய டீஸர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிம்பு மூன்று கேரக்டர்களில் நடிக்கவிருப்பதும், அதில் இரண்டு கேரக்டர்கள் குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளியாகிவிட்டன. மூன்றாவது கேரக்டர் எப்படிப்பட்டதாக இருக்கும்? அந்த மூன்றாவது கேரக்டரின் ஜோடி யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.