இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் படங்களில் நடித்தவர் மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த மோனல், தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாள படத்தில் நடித்து அங்கிருந்து தமிழுக்கு வந்தார். ஆனால் தமிழில் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தனது சொந்த மொழிக்கு திரும்பினார். தற்போது குஜராத்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கிறார்.
இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டு நடித்தார். சில நாட்கள் நடிக்கவும் செய்தார். இந்த நிலையில் படத்திலிருந்து மோனல் விலகி உள்ளார்.
"குஜராத்தி படங்களில் பிசியாக இருப்பதால் தமிழ் படத்திற்கு தேதி ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. அதனால் விலகி விட்டேன்" என்று மோனல் கூறுகிறார். ஆனால் வேலையில்லா பட்டதாரி படத்தில் அவருக்கு சிறிய கேரக்டர் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் மோனல் விலகியதாவும் கூறப்படுகிறது.