'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்கின்றார். மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரலில் நிறைவடையும் என கூறப்படுகின்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் தெலுங்கு, தமிழ், மற்றும் ஹிந்தியில் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் மகேஷ் பாபு இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்கின்றார். ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். மே முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இசையமைக்கும் பணிகளை துவங்கிய தேவி ஸ்ரீ பிரசாத் கொரட்டாலா சிவா மற்றும் மகேஷ் பாவுடன் 'பரத் எனி நேனு' படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் தலைப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத், தலைப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.