Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛விஜய் 61' ஸ்டில்கள் லீக் - அதிர்ச்சியில் படக்குழு

17 மார்,2017 - 17:44 IST
எழுத்தின் அளவு:

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். விஜய்யின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் அவருடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கூடவே எஸ்ஜே சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பின்னி மில்லில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.


விஜய் 61 படம் பற்றி தினம் ஒரு செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இப்படத்தில் விஜய் மூன்று விதமான ரோல்களில் நடிக்கிறார், படத்திற்கு ரஜினியின் பட தலைப்பான மூன்று முகம் தலைப்பை வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படக்குழு தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், உடம்பில் ரத்த காயங்களுடன் விஜய் சேரில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரோ செல்போனில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பரப்பி விட்டனர். தற்போது மேலும் இரண்டு போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இதில், விஜய் நெற்றி நிறைய பட்டை பூசி, முறுக்கு மீசையுடன் கையில் ஒரு குழந்தையுடன், அருகில் நித்யா மேனன் மற்றும் எஸ்ஜே சூர்யாவுடன் இருப்பது போன்ற போட்டோக்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


விஜய் 61 படத்தில் ஆச்சர்யமான பல விஷயங்கள் உள்ளன, படக்குழு அதிகாரப்பூர்வமாக போட்டோக்களை வெளியிடும் வரை யாரும் இதுபோன்று போட்டோக்களை வெளியிட வேண்டாம் என்று படக்குழு சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.


Advertisement
ஆஸி., - நியூசி.,யில் இசை நிகழ்ச்சி நடத்தும் தேவிஸ்ரீ பிரசாத்ஆஸி., - நியூசி.,யில் இசை நிகழ்ச்சி ... புரூஸ் லீ - கலாசாரத்தை காப்பாற்றினாரா ஜி.வி.பிரகாஷ்.? புரூஸ் லீ - கலாசாரத்தை ...


வாசகர் கருத்து (5)

18 மார்,2017 - 11:18 Report Abuse
Anna...Anna.. Entha Thollai ya yevalo than vatchi seirathu....chai...Bore adikithu....so No coments....
Rate this:
SIKKANDAR - CHENNAI,இந்தியா
18 மார்,2017 - 11:09 Report Abuse
SIKKANDAR this is vadivel comedy.
Rate this:
Ashok -  ( Posted via: Dinamalar Android App )
18 மார்,2017 - 08:05 Report Abuse
Ashok Enakku nalla vanthrum.....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17 மார்,2017 - 20:30 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பதான்கோட்டிலே விமானப்படை தளம் அடிவாங்குறது, ராணுவரகசியம் வெளியாறது எல்லாம் கூட பரவாயில்லை. இது எப்படி நடக்கலாம்..
Rate this:
அன்பே சிவம் - Madurai,இந்தியா
17 மார்,2017 - 18:30 Report Abuse
அன்பே சிவம் ஒரு கைதியின் டைரி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thupparivaalan
  • துப்பறிவாளன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :மிஷ்கின்
  Tamil New Film bongu
  • போங்கு
  • நடிகர் : நட்ராஜ்
  • நடிகை : ருகி சிங்
  • இயக்குனர் :தாஜ்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film odi odi ulaikanum

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in