ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் இந்திய அளவிலும், உலக அளவிலும் தனக்கென ஒரு தனி இடத்தைத் தொடர்ந்து பல ஆண்டு காலமாக தக்க வைத்துக் கொண்டிருப்பவர் மணிரத்னம். ‛ஓ காதல் கண்மணி' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மணிரத்னம் காற்று வெளியிடை என்ற படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி, அதிதி ராவ் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் தனித் தனியாக வெளியிடப்பட்ட மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காஷ்மீரின் அழகிய லோகேஷனில் காதலும், மோதலும் கலந்த கதையாக இப்படம் உருவாகி உள்ளது. காலத்திற்கேற்ப என்றும் இளமையுடன் இளம் ரசிகர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு படங்களைத் தருவதில் மணிரத்னத்திற்கு நிகர் அவரேதான் என திரையுலகினரே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே ‛காற்று வெளியிடை' படத்தின் அனைத்து பாடல்களும் வருகிற மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் எந்த கட்டும் கொடுக்காமல் ‛யு' சான்று கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காற்று வெளியிடை படம் வருகிற ஏப்., 7-ம் தேதி ரிலீஸாகிறது.