ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக பாலிவுட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்தவகையில் பாலிவுட்டின் இளம் நடிகையான ஸ்ரத்தா கபூர், தற்போது நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரியான ஹசீனா ரோலில் ஹசீனா என்ற படத்தில் நடிக்கிறார். அபூர்வா லக்கியா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதேப்போன்று பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தற்போது ரவி உத்ய்வார் இயக்கத்தில், ‛மாம்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. இரண்டு படங்களுமே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக உருவாகிறது. அதுமட்டுமல்ல இரண்டு படங்களும் ஒரேநாளில் மோத உள்ளன. அதன்படி, ‛ஹசீனா'வும், ‛மாம்'-படமும் வருகிற ஜூலை மாதம் 14-ம் தேதி பாக்ஸ் ஆபிஸில் மோதுகின்றன.