ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியத் திரையுலகம் பெரிதும் எதிர்பார்த்த பாகுபலி 2 டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் மிகப் பெரும் சாதனையை யு டியூபில் நிகழ்த்தியிருக்கிறது. நேற்று மாலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிரைலர் வெளியீடு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலையே லீக் ஆனது. அது எப்படி நடந்தது என்று படக்குழுவினரும் விசாரித்து வருகிறார்களாம். இருந்தாலும் நேற்று காலை வெளியான டிரைலர் அடுத்தடுத்த மணி நேரங்களில் யு டியூபில் முந்தைய சாதனைகள் பலவற்றையும் முறியடித்தது.
நேற்று காலை சுமார் 10 மணியளவில் வெளியான தெலுங்கு டிரைலர் 24 மணி நேரத்திற்குள் 2 கோடியே 18 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 5 லட்சம் லைக்குகளும், 30 ஆயிரம் கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.
ஷாரூக்கான் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரயீஸ் டிரைலர் 24 மணி நேரத்தில் 1 கோடியே 19 லட்சம் பார்வைகளைப் பெற்றதுதான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அந்த எண்ணிக்கையை சுமார் 6 மணி நேரங்களுக்குள் பாகுபலி 2 டிரைலர் முறியடித்துவிட்டது.
ஹிந்தி டிரைலருக்கு 24 மணி நேரத்திற்குள் 1 கோடியே 11 லட்சம் பார்வைகளும், தமிழ் டிரைலருக்கு 29 லட்சம் பார்வைகளும், மலையாள டிரைலருக்கு 5 லட்சத்து 47 ஆயிரம் பார்வைகளும் கிடைத்துள்ளன. மொத்தமாக நான்கு மொழிகளையும் சேர்த்து 3 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்து சாதனை புரிந்துள்ளன.
இந்த 24 மணி நேரத்தில் யு டியூப் சர்வர் கூட ரம்யா கிருஷ்ணன் சத்தமாகக் குரல் கொடுப்பதைப் போல அமரேந்திர பாகுபலி என்று சத்தம் போட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாகுபலி 2 டிரைலருக்கும், அதன் சாதனைக்கும் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு, குறிப்பாக ராஜமெலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழில் கொல வெறி பாடல் யு டியூப் என்பதை திரையுலகத்தில் ஒரு புயலாக நுழைந்தது. மீண்டும் அதை விடப் பல மடங்கு புயலை பாகுபலி 2 டிரைலர் ஏற்படுத்தியுள்ளது.
பாகுபலி 2 டிரைலரின் யு டியூப் சாதனை ஹாலிவுட் திரையுலகத்தையும் நிச்சயம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும்.
'பாகுபலி 2' அடுத்த மாதம் திரைக்கு வந்தால் 1000 கோடி வசூல் உறுதி என்று சமூக வலைத்தளங்களில் 'கமெண்ட்டுகள்' பறக்கின்றன.