தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றார். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் மகேஷ்பாபு, டோலிவுட்டின் பெண் இயக்குனர்களில் ஒருவரான ஜெயா இயக்கி வரும் வைஷாகம் படத்தின் பாடல்களை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார். குறைந்த பட்ஜெட் செலவில் உருவாகும் வைஷாகம் படத்தில் ஹரீஷ் மற்றும் அவந்திகா நாயகன் மற்றும் நாயகிகளாக நடிக்கின்றனர். ஆர்ஜே சினிமா சார்பில் பிஏ ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் பிரபல நடிகர் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுமாறு இயக்குனர் ஜெயா மகேஷ் பாபுவைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படத்தின் டிரைலரையும் ஜெயா மகேஷ்பாபுவிற்கு காண்பித்துள்ளார். டிரைலரைப்பார்த்து ரசித்த மகேஷ் பாபு ஜெயாவை மிகவும் பாராட்டியதோடு மேலும் பல வெற்றி படங்கள் இயக்க வேண்டும் என ஊக்குவித்துள்ளார். அதோடு கண்டிப்பாக தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் மகேஷ் பாபுவும் உறுதி அளித்துள்ளாராம்.