இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜீவன் நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் ஜெயிக்கிறகுதிர. சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்று முயற்சிக்கும் ஒரு வேடத்தில் ஜீவன் நடித் துள்ளார். அப்படி தான் லட்சியத்தில் ஜெயிப்பதற்கு அவர் என்னென்ன செய்கிறார் என்பதுதான் இந்த படம். அதை காதல், காமெடி, செண்டிமென்ட் என ஒரு கலவையாக இயக்கியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். இதற்கு முன்பு நான் அவனில்லை படத்தில் ஐந்து ஹீரோயினிகளுடன் நடித்த ஜீவன் இந்த படத்தில் மூன்று ஹீரோயினிகளுடன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கவிஞர் பிறை சூடனின் மகன் கவின் சிவா இசையமைத்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வீட்டுக்கொரு சாமி உண்டு அம்மா அம்மாடா, கோயில் குளம் போவதெல்லாம் சும்மா சும்மாடா -என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஹிட்டாகியுள்ளதாம். 6 பாடல்களையும் 3 நாளில் 6 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளார்களாம். அதேபோல், டிரெய்லரை 3 லட்சம் பேர் பார்த்து ரசித்து லைக் கொடுத்துள்ளார்களாம். குறிப்பாக, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அம்மா செண்டிமென்ட் பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகிறார்களாம். அதனால் மொத்த பாடல்களையும் இணையதளத்தில் வெளியிட்டவர்கள், இன்று அந்த செண்டிமென்ட் பாடலை தனி சிங்கிள் ட்ரேக்காக வெளியிடுகிறார்களாம். இதனால் அந்த பாடல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.