பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த பல வருடங்களுக்கு முன்பே பல இயக்குனர்கள் ஹீரோ அவதாரம் எடுத்தனர். அதில் சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மட்டுமே வெற்றி பெற்றனர்.அதையடுத்து தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்பட சில இசையமைப்பாளர்கள் ஹீரோவாகி அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். அதேபோல், பா.விஜய், சினேகன் போன்ற பாடலாசிரியர்களும் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் நடிகராக பெரிய இடத்தை பிடிக்க விவில்லை என்றபோதும் அதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது இன்னொரு பாடலாசிரியரான விவேகாவும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. அதனால் அதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுவது உண்மையில்லை. ஆனால் என்னை ஹீரோவாக நடிப்பதற்கு அழைக்கிறார்கள். அதனால் சரியான கதைகள் அமைந்தால் ஹீரோவாக நடிப்பது பற்றி யோசிப்பேன். இப்போதைக்கு பாடல்கள் எழுதுவதில் மட்டும் பிசியாக இருக்கிறேன் என்கிறார் விவேகா.