Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மருத்துவமனைக்கு விசிட் அடித்த குஞ்சாக்கோ - பஹத் பாசில்..!

16 மார், 2017 - 17:15 IST
எழுத்தின் அளவு:
kunchacko-boban---Fahad-fazil-visit-to-hospital

நேற்றுமுன் தினம் கொச்சியில் இருந்த தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்களுக்கும் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கும் திடீரென இன்ப அதிர்ச்சி.. ஆம். மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோவான குஞ்சாக்கோ போபனும், இளம் நாயகன் பஹத் பாசிலும் சேர்ந்து திடீரென மருத்துவமனைக்கு விசிட் அடித்தால் சந்தோசம் இருக்காதா என்ன..? சொன்னமாதிரி இது ஒரு விசிட் தானே தவிர, குஞ்சாக்கோவுக்கோ, பஹத் பாசிலுக்கோ அல்லது அவர்களது குடும்பத்திற்கோ சிகிச்சை விஷயமாக எல்லாம் இல்லை..


இந்த திடீர் விசிட்டிற்கு காரணமும் இருக்கிறது. குஞ்சாக்கோ, பஹத் பாசில், பார்வதி ஆகியோர் நடித்துள்ள படமான 'டேக் ஆப்' வரும் மார்ச்-24ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.. அரபு நாடுகளில் வேலை செய்வதற்காக கேரளாவில் இருந்து சென்ற நர்ஸ்கள் போர்க்களத்தின்போது என்னவித சிரமங்களுக்கெல்லாம் ஆளானார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு.. நர்ஸ் கேரக்டரில் பார்வதி நடிக்க, அரபு நாடு ஒன்றின் இந்திய தூதுவராக பஹத் பாசில் நடித்துள்ளார்.. கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் எடிட்டரான மகேஷ் நாராயணன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.


இந்தப்படத்தின் புரமோஷன் பணிகளில் இறங்கிவிட்ட படக்குழுவினரின் ஐடியா தான் இப்டி ஹாஸ்பிட்டல்களுக்கும் விசிட் அடித்து படத்தை புரமோட் பண்ணுவது.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் குஞ்சாக்கோ போபன் முதலில் விசிட் அடித்த மருத்துவமனையில் தான் அவர் பிறந்தாராம்.. அந்த தகவல் அங்குள்ளவர்களுக்கு தெரியவர இன்னும் கூடுதல் சந்தோசம் அடைந்தார்களாம்.. படத்துக்கு எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடுறாங்க பாருங்க..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in