Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய், அஜித், ரஜினி பட டிரைலர்களை ஓரம் தள்ளி பாகுபலி 2 டிரைலர் அசத்தல் சாதனை

16 மார், 2017 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Baahubali-2-trailer-breaks-all-records

இணையதளங்களில் தாங்கள்தான் நம்பர் 1 என விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளிவந்தாலும் ஒரே நாளில் ஒரு மில்லியன் சாதனை, ஒரு லட்சம் லைக்ஸ் என பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களது பெருமைகளை பாகுபலி 2 டிரைலர் ஒரு சில மணி நேரங்களிலேயே தூக்கியடித்துவிட்டது.


இன்று காலை சுமார் 10 மணி அளவில் பாகுபலி 2 படத்தின் டிரைலர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து யு டியூபில் வெளியாகின. பாகுபலி 2 படத்தின் முதன்மை முக்கியத்துவ மொழி என்பது தெலுங்கு மட்டும்தான். மற்ற மொழிகளைப் பொறுத்தவரையில் அது ஏறக்குறைய டப்பிங் படம்தான். சில குளோஸ்-அப் காட்சிகளை மட்டும் தமிழில் ஷுட் செய்துள்ளார்கள். எனவே, பாகுபலி 2 படத்தைத் தெலுங்கு ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவதில் வியப்பில்லை.


இந்தியத் திரையுலகிலேயே ஹிந்திப் படங்களின் டீசர், டிரைலர்களை அடுத்து தமிழ்த் திரையுலகத்தில்தான் அதிகப்படியான ஹிட்ஸ்கள் கிடைத்து வந்தன. தெலுங்குத் திரையுலகத்தில் இப்போதுதான் மில்லியன் ஹிட்ஸ்களைக் கடக்க ஆரம்பித்துள்ளார்கள். கைதி நம்பர் 150, கட்டமராயுடு ஆகிய படங்கள் யு டியூபில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தன.


ஆனால், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என இதற்கு முந்தைய அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து பாகுபலி 2 படம் யு டியூபில் சில மணி நேரங்களிலேயே அசத்தலான சாதனையைப் படைத்துள்ளது.


பாகுபலி 2 தெலுங்கு டிரைலர் சுமார் 5 மணி நேரத்திற்குள்ளாக 70 லட்சம் பார்வைகளைத் தொட்டுள்ளது. 3லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. 16000 கமெண்ட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் சாதனையாகும்.


பாகுபலி 2 ஹிந்தி டிரைலருக்கு 30 லட்சம் பார்வைகளும், தமிழ் டிரைலருக்கு 5.65 லட்சம் பார்வைகளும், மலையாள டிரைலருக்கு 2 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. யு டியுபில் பார்வைகளின் எண்ணிக்கையை கொஞ்சம் தாமதமாகவே அப்டேட் செய்வார்கள். தற்போது வரையில் பாகுபலி-2 பட டிரைலர், 4 மொழிகளிலும் 1 கோடி பார்வைகளை கடந்து இந்திய திரையுலகில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது.


அப்படிப் பார்த்தால் பாகுபலி 2 டிரைலர் 4 மணி நேரத்திற்குள் இன்னும் அதிகமான பார்வைகளையே பெற்றிருக்கும். இன்று மாலைக்குள் மேலும் பல மில்லியன் பார்வைகள் இந்த டிரைலரின் எண்ணிக்கையில் கூடும்.


பாகுபலி 2 டிரைலருக்குக் கிடைத்துள்ள இப்படிப்பட்ட மிகப் பெரிய வரவேற்பு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவர உள்ள 2.0 படத்திற்கு மிகப் பெரும் சவால் என்பதில் சந்தேகமில்லை.


விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள் இனி இணையதள சாதனைகளில் தாங்கள்தான் நம்பர் 1 என சொல்வதற்கே அச்சப்பட வேண்டிய சூழ்நிலையை பாகுபலி 2 ஏற்படுத்திவிட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in