தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அமீர்கான், அடுத்தப்படியாக ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என்ற படத்தில் நடிக்கிறார். தூம்-3 இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்காக அமீர்கான் தனது தோற்றத்தை நீண்ட தாடி, முறுக்கு மீசை என வித்தியாசமாக மாற்றி வருகிறார். மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்தது. ஆனால் தற்போது மேலும் மூன்று மாதங்கள் தள்ளி போய் உள்ளது.
இதுப்பற்றி அமீர்கான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று பேசியதாவது... ‛‛தற்போது நான் ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என்ற ஒரே ஒரு படத்தில் தான் நடித்து வருகிறேன். இப்படத்திற்காக பல்வேறு விதமான லுக்கை தேர்வு செய்து, அதில் எது சரியாக வரும் என்று ஒவ்வொன்றாக பரிசோதித்து வருகிறோம். இதனால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகிறது. ஜூன் மாதம் முதல் நான் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்'' என்று கூறியுள்ளார்.