Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்-அஜித், யார் சிறப்பாக நடனமாடுவார்கள்? -சொல்கிறார் டான்ஸ் மாஸ்டர் பாப்பி

16 மார், 2017 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Ajith---Vijay-Who-will-be-the-perfect-dancer---Poppy-reply

சுமார் 250 படங்களுக்கு மேல் நடன மாஸ்டராக பணியாற்றியவர் பாப்பி. தற்போது பரத் நடித்துள்ள சிம்பா, கெளதம் கார்த்தியின் இவன் தந்திரன், கரு.பழனியப்பனின் கள்ளன் உள்பட பல படங்களுக்கு பிசியாக நடனம் அமைத்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
தற்போது நடனம் அமைத்து வரும் படங்கள் பற்றி?


என்னை சினிமாவில் நடன மாஸ்டராக்கியவர் டைரக்டர் ஆர்.கண்ணன். பரத் நடிப்பில் அவர் இயக்கிய கண்டேன் காதலை படத்தில் என்னை மாஸ்டராக்கினார். நான் ரொம்ப பயந்தேன். அவர்தான் எனக்கு தைரியம் கொடுத்து அந்த படத்தில் என்னை நடன மாஸ்டராக அறிமுகம் செய்தார். தொடர்ந்து வாய்ப்பளித்தவர் இப்போது கெளதம் கார்த்திக்கை வைத்து தான் இயக்கியுள்ள இவன் தந்திரன் படத்திற்கும் என்னை நடனம் அமைக்க வைத்திருக்கிறார்.


இவன் தந்திரன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். ஒன்று டூயட், இன்னொன்று போக், மிக ஸ்டைலிசான அசைவுகளை கொடுத்து நடனம் அமைத்துள்ளேன். அதேபோல், பரத்தின் சிம்பாவில் ரொம்ப யூனிக்காக யாருமே யூஸ் பண்ணாத மூவ்மென்ட் கொடுத்து நடனம் அமைத்துள்ளேன். இதுக்கு அப்புறம் கள்ளன், கரு.பழனியப்பன் நடிக்கிற படம். அதுதவிர ஒரு கன்னட படம். மேலும், இவன் தந்திரன் படத்தில் ஒரு சின்ன மியூசிக் பிட்டில் நடனமாடியிருக்கிறேன்.


செக்ஸியான மூவ்மென்டைதான் யூத் ஆடியன்ஸ் அதிகமாக ரசிப்பதாக சொல்கிறார்களே?


அப்படியெல்லாம் இல்லை. குத்துப்பாட்டையும் ஒரு ஸ்டைலா பண்ணினால் ரொம்ப ரசிக்கிறாங்க. கவுதம் கார்த்திக் படத்துல அந்த மாதிரி ஒரு போக் ஸ்டைலில் மாஸான சாங் பண்ணியுள்ளேன். மூவ்மென்டுக்கு ஜனங்களாக ஒரு பேர் வைக்கிறாங்க. நாங்க ஒன்னு பண்ணினா விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடனமாடுபவர்கள் அவங்களாக ஒரு பேர் வைக்கிறாங்க. மேலும், இப்பல்லாம் காலேஜ் பசங்க, ரொம்ப ஸ்டைலிசா கை ஆக்சனோடு ஹிப் ஹாப் லாக்கிங் எல்லாம் போயி வேற வேற பாணியில் ஸ்டைலிசாக ஆடுறாங்க. அவங்களுக்கு ஏற்ற மாதிரி நம்மளும் புதுசா பண்றதுதான் நல்லாயிருக்கும்.


மொழிவாரியாக நடனம் வித்தியாசப்படுகிறதா?


மொழிக்கும், நடனத்துக்கும் சம்பந்தமே இல்லை. கான்சப்ட் சொன்னாங்கன்னா அதற்கு தேவையான மூவ்மென்ட் கொடுக்க வேண்டியதான். பாடலோட மீனிங் தெரிஞ்சா போதும். அதற்கு தேவையான நடனத்தை கொடுப்போம். எல்லா ரசனையும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. மேலும், நடிகர்களுக்கு தகுந்தார் போன்று மூவ்மென்டை மாற்றுவோம்.


விஜய்-அஜித் ஆகிய இருவரில் நடனத்தில் யார் சிறந்தவர்களாக கருதுகிறீர்கள்?


எனக்கு அஜித், விஜய் படங்களில் நடன மாஸ்டராக ஒர்க் பண்ண ரொம்ப ஆசை. அதோடு, இப்பல்லாம் எல்லா ஹீரோக்களுமே பாட்டுக்கு தகுந்தபடி நல்லா தான் ஆடுறாங்க. முதல்ல விஜய் நல்லா ஆடுறாருன்னு சொன்னாங்க. அஜித் ஆளுமா டோளுமா பாடலில் சூப்பரா ஆடிட்டாரு. அந்தவகையில், விஜய், அஜித் இருவருமே கிடைக்கிற பாடல்களில் சூழலுக்கேற்ப புகுந்து விளையாடுறாங்க. இரண்டு பேருமே நடனத்தில் கில்லாடிங்க தான். அப்புறம் சூர்யாவும் செமயா ஆடிக்கிட்டிருக்காரு, சிம்பு, தனுஷ், கார்த்திக், விஷால்ன்னு இப்ப யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. கிடைக்கிற பாடல் சூழலைப்பொறுத்து அதற்கேற்ப நல்லாவே ஆடுறாங்க என்கிறார் டான்ஸ் மாஸ்டர் பாப்பி.


Advertisement
கதாநாயகி பெயரை முதலில் போடுவதற்கு விதார்த் எதிர்ப்பு தெரிவித்தாரா?- டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா பதில்கதாநாயகி பெயரை முதலில் போடுவதற்கு ... வைரமுத்து தலைவர் பதவி ஏற்றால் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் - பாடலாசிரியர் சங்கத்தலைவர் தமிழமுதன் வைரமுத்து தலைவர் பதவி ஏற்றால் ...


வாசகர் கருத்து (4)

Shanu - Mumbai,இந்தியா
16 மார், 2017 - 21:17 Report Abuse
Shanu அஜித்துக்கு பேச தெரியாது, ஆட தெரியாது. சில நல்ல கொள்ககைளை வைத்து உள்ளதால், எல்லோருக்கும் அவரை பிடிக்கிறது. எந்த நடிகைகள் கூட நடித்தாலும் கெமிஸ்ட்ரி கிடையாது. ஒரு காலத்தில் வந்த ஆசை படம் தவிர. விஜய் நல்லா ஆடுவார். விஜய்க்கு கொஞ்சம் தலை கனம் அதிகம்.
Rate this:
YesJay - Chennai,இந்தியா
16 மார், 2017 - 19:36 Report Abuse
YesJay அஜித் எங்கப்பா ஆடினார்.....அவர் எல்லா பாட்டிலையும் நடக்க மட்டும் தான் செய்றாரு.
Rate this:
vedha - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2017 - 17:55 Report Abuse
vedha semma comment shiva
Rate this:
shiva - tirunelveli  ( Posted via: Dinamalar Windows App )
16 மார், 2017 - 14:53 Report Abuse
shiva unga camparison la theeya veilka... ajith engaya aaduvan camera than aadum....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in