பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெய்-அஞ்சலி மீண்டும் இணைந்து நடிக்கும் பலூன் எனும் திரில்லர் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ்தருண் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்-அஞ்சலி கெமிஸ்ட்ரி பரவலாக பேசப்பட்டது. மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் பலூன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஜனனி ஐயர் நடிக்கின்றார்.
70 எம் எம் நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த பலூன் படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார்.
டோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ராஜ்தருண் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். 10 நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள ராஜ்தருண் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார். பலூன் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவுள்ளது.