'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்திற்கு பின்னர் நாகார்ஜூனா நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் இளம் நடிகர் நிகிலும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். நாகார்ஜூனா தனது மகன் நாகசைதன்யாவிற்கு பிரேமம் எனும் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் சண்டூ மொண்டேட்டிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார். சண்டூ மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கும் நாகார்ஜூனா அப்படத்தை தனது அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவும் செய்கின்றார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகியாக மலையாள நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிக்கின்றார். பிரேமம் படத்தில் அனுபமாவின் நடிப்பைப்பார்த்து பிடித்துப்போன நாகார்ஜூனா அவரை இப்படத்தில் நாயகியாக தேர்வு செய்துள்ளார். நிகிலுக்கு ஜோடியாக அனுபமா இப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.