அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்த சுரபி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சர்வானந்திற்கு ஜோடியாக எக்ஸ்பிரஸ் ராஜா எனும் தெலுங்கு படத்தில் நடித்த சுரபி அப்படத்திற்கு பின்னர் அல்லு சிரிஷிற்கு ஜோடியாக நடிக்கின்றார். பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகனும் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூனின் தம்பியுமான அல்லு சிரிஷ் கௌரவம் எனும் தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
டோலிவுட்டில் முன்னணி நடிகராக வேண்டும் எனும் ஆவலுடன் படங்களில் நடித்து வரும் அல்லு சிரிஷிற்கு இதுவரை வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் அல்லு சிரிஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக சுரபி நடிக்கின்றார். நாயகியாக சுரபியின் பெயரை பரிந்துரை செய்தது அல்லு சிரிஷ் என்று கூறப்படுகின்றது. பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் சுரபி தனது நண்பர் அல்லு சிரிஷிடம் உதவி கேட்டதாகவும் அவரது பரிந்துரையிலேயே சுரபி இப்படத்திற்கு நாயகியாக மாறியதாகவும் டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இயக்குனர் ஈடுபட்டு வருகின்றார்.