Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் வீடு வாங்க 2 கோடி ரூபாய் வேண்டுமே!: ஐஸ்வர்யா ராஜேஷ்

16 மார், 2017 - 00:33 IST
எழுத்தின் அளவு:
2-crore-to-buy-a-house-in-Chennai:-Aishwarya-Rajesh

தமிழ், ஹிந்தி, மலையாளம் என, மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்து உள்ளார், ஐஸ்வர்யா ராஜேஸ். கடுமையான போராட்டங்களுக்கு பின், வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்து வெளிவரவுள்ள, கட்டப்பாவ காணோம் படம் பற்றியும், தன்னைப் பற்றியும் பேசுகிறார் ஐஸ்வர்யா.


அது என்ன தலைப்பு; கட்டபாவ காணோம்?


புதுமுக இயக்குனர் மணி இயக்கத்தில், சிபிராஜுடன் நடித்த படம் இது. இந்த படம், தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். கட்டப்பா என்பது ஒரு மீன் பெயர்; இந்த படத்தில், அதுதான் ஹீரோ என, சொல்லலாம். படத்தில் என் பெயர் மீனா; மற்ற நடிகர்கள் பெயரும், வஞ்சிரம், வவ்வால், சுறா என, மீன்கள் தொடர்பாகவே இருக்கும். ஒரு குடும்பத்தில், மீனால் ஏற்படும் பிரச்னை தான், கதை. படத்தில் ஹீரோவுக்கு சமமான ரோலில் நடித்துள்ளேன். எனக்கும் காமெடி வசனங்கள் எல்லாம் இருக்கிறது. இதுவரை என் படங்களில் மிகவும் எளிமையாக தான் நான் வந்திருப்பேன். இப்போது முதன்முறையாக கொஞ்சம் மார்டன் ரோலில் நடித்துள்ளேன்.


தமிழ் சினிமாவில் நீங்கள் ஒரு படி முன்னேறி இருப்பது மாதிரி தெரிகிறதே...?


அதை நீங்க தான் சொல்லணும். எங்கிருந்து நான் வந்தேன் என்று தெரியும். சினிமாவில் எந்த குடும்ப பின்னணியும் கிடையாது. சினிமா பற்றி ஏதும் தெரியாது, எனக்கு வழிகாட்ட கூட ஆள் இல்லை. சின்னத்திரை டான்ஸ்ஷோ மூலம் அரியப்பட்டேன். ஆரம்பத்திலேயே எனக்கு நல்ல படம் கிடைத்தது. நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவில்லை. இவ்வளவு தூரம் வந்ததே பெருமையாக உள்ளது. கடவுள் ஆசிர்வாதத்தோடு இன்னும் அடுத்தடுத்த லெவலுக்கு போக வேண்டும்.


இப்போதெல்லாம், உங்கள் படங்கள் அதிகமாக வருவது இல்லையே?


எனக்கு பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். கதையை தேர்வு செய்து தான், நடிக்கிறேன். கதை பிடித்திருந்தால், சின்ன ரோலாக இருந்தாலும் நடிப்பேன். சின்ன இயக்குனர், பெரிய இயக்குனர், முன்னணி நடிகர், புதுமுக நடிகர் என்ற பாரபட்சம் எல்லாம் என்னிடம் கிடையாது. துல்கர் சல்மானுடன் மலையாளத்தில் நடித்த படம், பெரிய ஹிட். பல கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. அந்த படத்தில் வைதேகி என்ற ரோலில் நடித்தேன். மலையாள ரசிகர்கள், அந்த பெயரைச் சொல்லித் தான், என்னை அழைக்கின்றனர்.


காக்கா முட்டை படத்தில் நடிக்காவிட்டால், இந்த அளவுக்கு பிரபலமாகி இருப்பீர்களா?


நிச்சயமா அது உண்மை தான்; காக்கா முட்டையில் நடிக்காமல் இருந்தால், இந்த இடத்தில நான் இருக்கவே மாட்டேன். அந்த படத்தால் தான், எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன.அந்த படத்தில், அம்மா கேரக்டரில் நடிக்க, பல நடிகையரை இயக்குனர் அணுகிய போது, பலரும் மறுத்துவிட்டனராம்; இப்போது அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்ததைப் பார்த்து, அந்த நடிகையர் எல்லாம், உண்மையில் வருத்தப்பட்டு இருப்பார்கள்.


விஜய் சேதுபதி உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக...


அப்படி சொல்ல முடியாது; காயத்ரி, ரம்யா நம்பீசன் போன்ற நடிகையரும், விஜய் சேதுபதி படங்களில் தொடர்ந்து நடிக்கின்றனர். அப்படியானால், அவர்களுக்கும் விஜய் சேதுபதி ஆதரவு அளிக்கிறார் என, கூற முடியுமா? இப்படி தொடர்ந்து செய்தி ளியானதால், அவர் எனக்கு வாய்ப்பு தர மறுத்தார். எனக்கு என்னவோ, விஜய் சேதுபதிக்கு பொருத்தமான ஜோடியாக, ரம்யா நம்பீசனைத் தான், நினைக்கிறேன். சேதுபதி படத்தில், அவர்களின் கெமிஸ்ட்ரி, அந்த அளவுக்கு ஒர்க் அவுட்டாகி இருந்தது.


படப்பிடிப்புக்கு வெளியூர் செல்லும் போது, யார் துணைக்கு வருகின்றனர்?


சில நேரங்களில் அம்மா வருவாங்க; சில நேரங்களில் என் சொந்தக்கார பெண் வருவார். ஆனாலும், ஒரு சில சமயங்களில், தனியாகவே போவேன். இப்போதுள்ள பெண்களிடம் தைரியம் அதிகமாக உள்ளது. பெரிதாக பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், பாதுகாப்பு குறைந்து விட்டது போல் தான், தெரிகிறது.


இப்ப கொஞ்சம் கிளாமரா இருக்கிற மாதிரி தெரியுதே ?


அப்படியா; கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். அதிகமாக, ஜூஸ் குடிக்கிறேன். பிரியாணி போன்ற உணவுகள் எல்லாம், எப்போதாவது தான். ரெகுலராக, உடற்பயிற்சியும் செய்கிறேன்.


ஐந்து வருஷம் கழித்து ஐஸ்வர்யா எப்படி இருப்பாங்க ?


நிகழ்காலத்தை மட்டுமே யோசிக்கும் பெண் நான். எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. கடவுள் காட்டும் வழியில் தொடர்ந்து நடைபோடுவேன்.


சம்பளம் உயர்த்திவிட்டதாக செய்தி வந்ததே?


நான் நடித்த பல படங்களில் பெரும்பாலானவை, மனதுக்கு பிடித்தவை. பணத்தை எதிர்பார்த்து, இந்த படங்களில் நடிக்கவில்லை. இனி நடிக்கும் படங்களில் தான், அதிகம் சம்பாதிக்க வேண்டும். நடித்த படம், ஹிட் ஆகிவிட்டால், சம்பளம், தானாகவே உயர்ந்துவிடும். இன்னும் வாடகை வீட்டில் தான், வசிக்கிறேன். சென்னையில் வீடு வாங்க, இரண்டு கோடி ரூபாய் வேண்டும். இன்னும், அவ்வளவு சம்பாதிக்கவில்லை. சத்தியமா, நம்புங்க ப்ளீஸ்.

Advertisement
காதலும், மோதலும் கலந்த விருந்து!காதலும், மோதலும் கலந்த விருந்து! மாநகரத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்த ரஜினி மாநகரத்தை சீட்டின் நுனியில் ...


வாசகர் கருத்து (2)

Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
23 மார், 2017 - 10:18 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar எனக்கு பிடித்தமான நடிகை. ஆனால். இவரு எந்த மொழியுனு தெரியாது.....?
Rate this:
N. Sridhar - Kanjipuram  ( Posted via: Dinamalar Windows App )
16 மார், 2017 - 05:46 Report Abuse
N. Sridhar Kaatru Ulla Poadhaey Thootriko
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in