ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'பைரவா' படம் பட்டையைக் கிளப்பும் என்று வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் அதிர்வுகளால் 'பைரவா' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது. அதன்பின் வினியோகஸ்தர்கள் தரப்பில் 'பைரவா' படம் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற அறிவிப்பும் வெளியானது.
'பைரவா' படத் தோல்விக்கு படத்தின் பாடல்களையும் ஒரு காரணமாக அப்போது விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே பாடல்கள் 'சூப்பர் ஹிட்' வரிசையில் இடம் பெறும் பாடல்களாகவே இருக்கும். ஆனால், 'பைரவா' படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் பாடல்களிலும், பின்னணி இசையிலும் ரசிகர்களை நிறையவே ஏமாற்றினார்.
இருந்தாலும், விஜய்யின் எந்தப் படத்தையும், பாட்டையும் பார்த்து 'லைக்' போடும் அவருடைய ரசிகர்கள் சுமாரான 'பைரவா' பாடல்களைக் கூட யுடியூபில் பார்த்து பார்வைகளை ஏற்றியிருக்கிறார்கள்.
'பைரவா' படத்தில் இடம் பெற்ற 'நில்லாயோ...' பாடல் சில வாரங்களுக்கு முன்பு யு டியுபில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது. இப்போது படத்தின் மற்றொரு மிகச் சுமாரான பாடலான 'பாப்பா...பாப்பா' பாடல் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 'பைரவா' படத்தின் பாடல்கள் உண்மையிலேயே சூப்பராக இருந்திருந்தால் 2 கோடி பார்வைகளைத் தாண்டியிருந்திருக்குமோ...?.