ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வெளிவந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அஜித் தற்போது நடித்து வரும் 'விவேகம்' படம் வரும் ஆகஸ்ட் மாதம்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்கிறார்கள். அதற்கடுத்து இறுதிக்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைந்தால் ஆகஸ்ட் வெளியீடு என்பது உறுதி. 'விவேகம்' படத்தின் வியாபாரப் பேச்சு வார்த்தைகள் சமீபத்தில் ஆரம்பமானதாகவும், 'வேதாளம்' படத்தை விட 'விவேகம்' படத்தின் தமிழ்நாட்டு உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
'வேதாளம்' படத்தின் தமிழ்நாட்டு வியாபாரம் 40 கோடி என்றும், 'விவேகம்' படத்தின் வியாபாரம் 50 கோடிக்கு நடந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். 'வேதாளம்' படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் நல்ல லாபம்தான் ஆனால், படத்தைத் தயாரித்தவருக்கு நஷ்டம் என்பதுதான் உண்மையான நிலவரம். இந்த உண்மையைச் சொன்னால் கூட அஜித் ரசிகர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். 'வேதாளம்' படத்திற்குப் பிறகு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகுதான் அப்படத்தின் தயாரிப்பாளர், விஜய் சேதுபதி நடித்து வரும் 'கருப்பன்' படத்தைத் தயாரித்து வருகிறார். மீண்டும் அவர் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
'விவேகம்' படத்தின் முதல் பார்வைக்கே கடும் விமர்சனங்கள் எழுந்தன. எப்படியும் அடுத்த மாதம் டீசர் வெளியீடும், அதற்கடுத்து டிரைலவர் வெளியீடும் இருக்கும். 'வேதாளம்' படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைக் கொடுத்ததைப் போல இல்லாமல் 'விவேகம்' படத்தைத் தயாரிப்பாளருக்கும் சேர்த்து நல்ல லாபம் தரும்படியான வியாபாரம் நடக்கட்டும் என்றே மற்ற தயாரிப்பாளர்களும் கருதுகிறார்கள் என ஒரு தயாரிப்பாளர் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்களாம்.