ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், 2014 மார்ச் 14ல் ஜனசேனா எனும் அரசியல் கட்சியை ஐதராபாத்தில் நிறுவினார். மூன்று ஆண்டுகளைக் கடந்து பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. இதனை ஜனசேனா தொண்டர்கள் உற்சாகமாக கொண்டுகின்றனர். பவன் கல்யாணின் ரசிகர்கள் பலர் ஜனசேனா கட்சியில் இணைந்து அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 2014 டிசம்பர் 11ல் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. திரைப்படங்களில் பிசியாக இருக்கும் போதிலும் கட்சிப்பணிகளையும் பவன் கல்யாண் கவனித்து வருகின்றார். மேலும் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ள பவன் கல்யாண் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துக் கொள்ளவும் தீர்மாணித்துள்ளார். கட்சிக்கு தேவையான நிதி திரட்டிய பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பவன் கல்யாண் வெளியிடுவார் என ஜனசேனா கட்சிக்கு நெருக்கமானவர்கள் கூறிகின்றனர். பவன் கல்யாண் நடித்துவரும் கட்டமராய்டு திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.