ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடித்த படம் 36 வயதினிலே. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ -என்ற படத்தில் ரீமேக்கான இந்த படம் ஜோதிகாவுக்கு நல்லதொரு ரீ-என்ட்ரியாக அமைந்தது. அதனால் அதை யடுத்து வருடம் ஒரு படத்தில் நடித்தாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஜோதிகா. சில டைரக்டர்கள் சொன்ன கதை பிடிக்காததால் நேரடியாகவே கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு நல்ல கதைகளுக்காக காத்திருந்தபோதுதான் குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா சொன்ன மகளிர் மட்டும் கதையை ஓகே செய்தார் ஜோதிகா.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த நேரத்தில் இப்படத்தில் டாகுமெண்டரி பிலிம் இயக்குனராக ஜோதிகா நடித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, இந்த மகளிர் மட்டும் பட மும் ஒரு டாகுமெண்டரி பிலிம் போலவே படமாக்கப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. கிட்டத்தட்ட குற்றம் கடிதல் பாணியில் உருவாகியிருக்கிறதாம். ஆனால், இப்படியொரு செய்தி பரவியதை அடுத்து, அதிர்ச்சியடைந்த அந்த படக்குழு, இதை மாற்ற வேண்டும் என்பதற்காக மகளிர் மட்டும் படம் எல்லாவித கமர்சியல் விசயங்களும் கலந்த படமாக தயாராகியிருப்பதாக ஒரு செய்தியை உலவவிட்டிருக்கிறார்கள்.