ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் வருடத்திற்கு சராசரியாக 200 படங்கள் வெளிவந்தால் அதில் 20 படங்கள் வெற்றி பெறுவதே கடினமாக இருந்து வருகிறது. மற்ற 180 படங்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் அந்த சோகத்தைச் சொல்ல வார்த்தைகளே இருக்காது.
இருந்தாலும் புதிது புதிதாக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். 2016ம் ஆண்டு வெளிவந்த படங்களில் புதிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற ஒரே படம் 'துருவங்கள் 16'. இப்படத்தின் 75வது நாள் வெற்றியை நன்றி அறிவிப்பாக நேற்று நடத்தினார்கள்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர், வினியோகஸ்தரான அபினேஷ் இளங்கோவன், “2017ம் ஆண்டில் படங்களின் வெற்றியை ஆரம்பித்து வைத்த படமாக 'துருவங்கள் 16' படம் இருந்தது. அனைத்து உரிமைகளும் விற்கப்பட்ட ஒரே படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது. இப்படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமை விற்கப்பட்டுவிட்டது. சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை ஆகியவையும் விற்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் படத்தின் உரிமையும் இந்த அளவிற்கு விற்கப்பட்டதில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையையும் நாங்களே வாங்கியுள்ளோம். இந்த மாதிரி சிறிய படங்கள் ஜெயிக்கும் போதுதான் பல புதியவர்கள் வருவார்கள், நல்ல படங்கள் வரும். அதற்கான பாதையை இந்தப் படத்திதன் இயக்குனர் கார்த்திக் நரேன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்,” என்றார்.