ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் 'துணைவன்' படம் மூலம் 1967ம் ஆண்டு தன்னுடைய 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் ஸ்ரீதேவி. தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் 'மூன்று முடிச்சு' படம் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜிகணேசன் உள்ளிட்ட பலருடன் நாயகியாக நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்த ஸ்ரீதேவி, ஹிந்திக்கும் சென்று அங்கும் நம்பர் 1 நாயகியாக பல வருடங்கள் இருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012ம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்தார். அடுத்து 2015ம் ஆண்டு வெளிவந்த 'புலி' படத்தில் நடித்தார். ஹிந்தியில் 5 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்து வெளிவரும் 'மாம்' படத்தில் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது.
ரவி உடிவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் ஸ்ரீதேவியின் 300வது படம். 50 வருடங்களாகத் திரையுலகில் இருக்கும் ஸ்ரீதேவியின் 300வது படமான 'மாம்' படம் ஜுலை 14ம் தேதி வெளியாக உள்ளது.
“ஒரு பெண்ணிற்கு சவால் விடப்பட்ட போதும்” என்ற வரிகளுடன் இப்படத்தின் முதல் பார்வையை ஸ்ரீதேவி பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் குழந்தைகளாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த குழந்தை நட்சத்திரங்களான சாஜல் அலி, அட்னான் சித்திக் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிட உள்ளார்கள். ஆனால், முதல் பார்வையில் பல்வேறு மொழிகளில் 'மாம்' என்ற வார்த்தையை எழுதியுள்ளவர்கள் தமிழில் அதை எழுத மறந்துவிட்டார்கள்.