மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் வியாபாரம் பற்றிய பரபரப்பானத் தகவல்கள் நேற்று முதல் வெளியாக ஆரம்பித்துவிட்டன. படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சாட்டிலைட் உரிமை 15 வருடங்களுக்கு ஜீ டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.
ஜீ டிவிக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டது உண்மைதான் என்று லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜு மகாலிங்கும் நேற்றே உறுதி செய்தார். ஆனால், எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை. இருந்தாலும் பேட்டி ஒன்றில் 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது சாட்டிலைட் உரிமை மட்டுமே. படத்தின் டிஜிட்டல் உரிமைகளை விற்க அமேசான் பிரைம் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் '2.0' படத்தின் டிஜிட்டல் உரிமை என்பது மிகப் பெரும் விலைக்கு விற்கப்படும் என்றே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியத் திரையுலகில் வேறு எந்தப் படத்திற்கும் கிடைக்காத ஒரு தொகை இப்படத்திற்குக் கிடைக்கலாம். அப்படி நிர்ணயிக்கப்படும் தொகை இந்தியத் திரைப்படங்களுக்கான ஒரு முன்மாதிரித் தொகையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இவை தவிர்த்து '2.0' படத்தின் வினியோக உரிமை ஒவ்வொன்றையும் பிரித்து விற்கும் பட்சத்தில் படத்தின் பட்ஜெட்டை படத்தின் வியாபாரம் எளிதாகக் கடந்துவிடும். ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'கபாலி' திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்ததாகச் சொல்லபட்டது.
தமிழ்நாடு தியேட்டர் உரிமை மட்டும் சுமார் 70 கோடிக்கும், தெலுங்கு உரிமை சுமார் 32 கோடிக்கும், கேரள உரிமை 7 கோடிக்கும், கர்நாடகா உரிமை 10 கோடிக்கும், வட இந்திய உரிமை 15 கோடிக்கும் வெளிநாட்டு உரிமை 30 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 40 கோடிக்கும் விற்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அதிக செலவில் தயாரிக்கப்படாத 'கபாலி' படத்திற்கே அவ்வளவு வியாபாரம் என்றால், மிகவும் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டுள்ள '2.0' படம் அதை விட அதிக அளவிற்கு வியாபாரம் ஆகும்.
மேலும், அக்ஷய் குமார் நடித்துள்ளதாலும் படத்தை ஹிந்தியிலும் நேரடியாக உருவாக்குவதாலும் வட இந்திய மார்க்கெட்டில் '2.0' வியாபாரம் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்த வியாபாரம் 500 கோடியைத் தாண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.