ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போக்கிரி, பிசினஸ்மேன், டெம்பர் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பூரி ஜெகன்நாத் முதன்முறையாக பாலகிருஷ்ணாவுடன் இணைந்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் ஐதரபாத்தில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனுப் ரூபன்ஸ் பாலகிருஷ்ணாவின் 101வது படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இஷ்க், மனம், சொக்கடே சின்னி நயன, போன்ற வெற்றிப்படங்களில் பணியாற்றிய அனுப் ரூபன்ஸ் இசையில் அண்மையில் வெளிவந்துள்ள கட்டமராய்டு திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. நேன நா ராக்ஷஷி, ஹார்ட் அட்டாக், டெம்பர், ஐஎஸ்எம் போன்ற, பூரி ஜெகன்நாத் படங்களில் பணியாற்றிய அனுப் ரூபன்ஸ் மீண்டும் பூரிஜெகன்நாத் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.