ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் கேத்ரின் தெரஸா. அந்த படம் அவருக்கு ஹிட்டாக அமைந்தபோதும் அதன்பிறகு நடித்த கதகளி, கணிதன் படங்கள் பெரிய ரீச் கொடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது மஞ்சப்பை ராகவா இயக்கியுள்ள கடம்பன் படத்தில் பழங்குடியின பெண்ணாக ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கேத்ரின் தெரஸா.
காடும், காடு சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பின்னணியில் தயாராகியுள்ள இந்த படத்தில் கிட்டத்தட்ட 70 பாங்காங் நாட்டு யானைகள் நடித்துள்ளன. அந்த வகையில், ஒரு காட்சியில் காட்டு யானை ஒன்று கேத்ரின் தெரசாவை துரத்துமாம். அப்போது அந்த வழியாக வரும் ஆர்யா, அந்த யானை முன்பு பாய்ந்து அதனுடன் சண்டையிட்டு கேத்ரின் தெரசாவை காப்பாற்றுவாராம்.
இந்த காட்சியில் ரோப்பில் தொங்கியபடி மரக்கிளைகளில் மோதி கீழே விழுந்து இயல்பாக நடித்திருக்கிறாராம் ஆர்யா. எந்தவொரு ஹீரோக்களும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்து ஆர்யா துணிச்சலாக நடித்ததைப்பார்த்து மிரண்டு விட்டாராம் கேத்ரின் தெரசா. இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், ஆர்யாவின் இந்த அதிரடி நடிப்பு குறித்து தனது சக நடிகைகளிடம் சொல்லி ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார் அவர்.