ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. கடந்த 2 வருடங்களாக பரபரப்பாக நடந்து வந்த 2.0 படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், இன்னும் ஒரு பாடல் காட்சியும் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளன.
சில மாதங்களுக்கு முன் 2.0 படத்தின் பர்ஸ்ட்லுக்கை மும்பையில் வெளியிட்டனர். ஆயுத பூஜை அன்று 2.0 படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இந்த வருடம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது 2.0 திரைப்படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதால், 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை மொத்தமாக ரூ.110 கோடி கொடுத்து ஜீ டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது.
வழக்கமாக சாட்டிலைட் ரைட்ஸ் அக்ரிமெண்ட்டில் யுடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ரைட்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும். 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் வியாபாரதித்தில் டிஜட்டல் ரைட்ஸ் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, 15 வருடங்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.
2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விற்கப்பட்டதை அறிந்து பாலிவுட் வட்டாரம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. காரணம்... அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் போன்றவர்களின் படங்கள் சாட்டிலைட் ரைட்ஸ் மட்டுமே இந்த அளவுக்கு பெரியவிலைக்கு போகும். முதன்முறையாக, பாலிவுட் அல்லாத ஒரு தென்னிந்திய திரைப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விலைபோயிருப்பது சாதனைதான்.
2.0 படத்தின் பட்ஜெட் 350 கோடி என்று சொல்லப்பட்டு வரும்நிலையில் படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பகுதியை சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையிலேயே திரும்ப எடுத்துவிட்டது லைகா.