‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இயக்குனர், தயாரிப்பாளர் கேயார் தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு அணியும், விஷால் தலைமையில் வேறொரு அணியும், தயாரிப்பாளர் டி. சிவா தனியாகத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். கடந்த பத்து நாட்களாகவே உறுப்பினர்களின் வீடு தேடிச் சென்று பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். வார்த்தை மோதல்கள் கடுமையாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற 'ஜெயிக்கிற குதிர' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணிகளில் போட்டியிடும் பலரும் ஒரே மேடையில் அமர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். கேயார் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் எஸ்.ஏ.சந்திரசேகர், நேற்றைய விழாவில் பேசும் போது முந்தைய நிர்வாகத்தினரின் செயல்பாடு குறித்து விமர்சித்துப் பேசினார். விஷால் பேசும் போது, அடுத்த இரண்டு வருடங்கள் நாங்கள்தான் இருப்போம் என்று மறைமுகமாகப் பேசினார். அதோடு, நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவியையே பார்த்துவிட்டோம். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எதிர்த்துப் பேசுபவர்களைப் பற்றிக் கவலையில்லை என்றார். மேலும், தேர்தலில் போட்டியிடும் டி. சிவா, ஏ.எல்.அழகப்பன், மன்சூரலிகான் உள்ளிட்டவர்களும் பேசினார்கள்.
தேர்தல் சமயத்தில் ஒரே மேடையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாலும் பேசும் போது ஒருவருக்கொருவர் காரசாரமாகப் பேசாமல் கிண்டலாகப் பேசினாலும், கண்ணியமாகப் பேசியது விழாவுக்கு வந்திருந்த திரையுலகத்தினரையும், பத்திரிகையாளர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. 'ஜெயிக்கிற குதிர' விழாவில் கலந்து கொண்டவர்களில் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜெயிக்கப் போகிறவர்கள் யார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.