ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று 'பாகுபலி 2', மற்றொன்று '2.0'. அதிலும் பாகுபலி-2 அடுத்தமாதம் வெளியாக இருப்பதால் இப்போதிருந்தே அப்படம் பற்றிய செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. 'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதுதவிர அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் படத்தின் டிரைலரை இன்னும் ஓரிரு நாளில் அதாவது மார்ச் 16-ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
இதற்கிடையே பாகுபலி-2 டிரைலருக்கு ஒரு டீசர் வெளியிட்டு உள்ளார்கள். அதில் பிரபாஸின் பாதி முகம் மட்டுமே தெரிகிறது. முகமெல்லாம் ரத்த வடிந்தபடி, மிகவும் ஆக்ரோஷமாக பார்க்கிறார். இறுதியில் பாகுபலி-2 டிரைலர் 16-ம் தேதி வருகிறது என்ற அறிவிப்பு வருகிறது. சுமார் 12 விநாடிகள் ஓடக்கூடியதாக இந்த டீசர் அமைந்துள்ளது. படத்தின் டிரைலருக்கே புதிதாக ஒரு டீசரை வெளியிட்டு ஒரு புதிய டிரெண்ட்டை பாகுபலி படக்குழு ஆரம்பித்து வைத்துள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் பாகுபலி இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.