இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தற்போது தமிழில் ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருபவர் நிக்கி கல்ராணி. டார்லிங் படத்திற்கு பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கொடுத்த ஹிட் காரணமாக இத்தனை படங்களில் ஒரேநேரத்தில கமிட்டான நிக்கி கல்ராணி, மற்ற மொழிப்படங்களை ஏறக்கட்டிவிட்டு முழுநேர தமிழ்நடிகையாக கோடம்பாக்கத்தில் டேரா போட்டிருக்கிறார்.
மேலும், லாரன்சுடன் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியானால் எனது லெவலே வேற என்று பெரிய பில்டப் கொடுத்து வந்தார் நிக்கி. ஆனால் இப்போது அப்படம் வெளியாகி சர்ச்சையை சந்தித்திருப்பதோடு, நிக்கி கல்ராணி தேவையில்லாமல் ஓவர் கிளாமர் காண்பித்து நடித்திருப்பதாக சொல்லி இணையதளம் மூலம் ரசிகர்கள் அவரை சீண்டி கோபப்படுத்தியுள்ளனர். ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டு நிக்கி கல்ராணியை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
அதையடுத்து மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நான் ஒன்றும் கிளாமரில் ஓவர் டோஸ் கொடுக்கவில்லை. மீடியமாகத்தான் ஆடைகுறைப்பு செய்திருந்தேன். அதுவும் கதைக்கு தேவைப்பட்டதால். அந்த கதைக்கு நான் அப்படி நடிக்கவில்லை என்றால் எடுபடாது. மேலும், டைரக்டர் சாய் ரமணி, லாரன்ஸ் வலியுறுத்தியதால் நான் கிளாமராக நடித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அதில் துளியும் உண்மையில்லை. யாரும் என்னை வற்புறுத்தவில்லை. கதையை சொல்லி இந்த அளவுக்கு மாடர்னாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அந்த கதைக்கு அப்படி நடிப்பது அநாவசியமில்லை, அவசியம் என்பதால் நானும் ஒத்துக்கொண்டு நடித்தேன் என்கிறார் நிக்கி கல்ராணி.