ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2002ல் விஜய் -பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத். அதன்பிறகு கி.மு, துணிச்சல், பைசா ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது டார்ச்லைட் என்றொரு விழிப்புணர்வு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சதா, அஞ்சலி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது சதா-ஸ்ரேயா இருவரும் அப்படத்தில் நடிப்பதாக சொல்கிறார் டைரக்டர் மஜித்.
இந்த படம் குறித்து அவர் கூறுகையில், சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நாளக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பெண் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு தீரும்புவது என்பதே சவாலாக உள்ளது. பேருந்தில் சென்றால்கூட பிரச்சினைதான். இப்படி சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை எதிர்த்து இரண்டு பெண்கள் களமிறங்குவதுதான் இந்த டார்ச்லைட் படம்.
இந்த தலைப்பு ஆங்கிலமாக இருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது இந்த தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு கதை அமைந்துள்ளது. மேலும், சதா-ஸ்ரேயா இருவரும் லீடு ரோலில் நடிக்கிறார்கள். திருநெல்வேலியில் உள்ள கோவில்பட்டியில் நடக்கும் கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. பெண்கள் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு சொல்லும் படமாக இந்த டார்ச்லைட் இருக்கும் என்கிறார் மஜீத்.